தலைதூக்கும் செம்மரக் கட்டைகள் கடத்தல்: தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் கைது

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
Red Sandalwood Smuggling
Red Sandalwood Smugglingpt desk
Published on

திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர ரெட்டி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “திருப்பதி மாவட்டம் பாக்கராப்பேட்டை அருகே உள்ள எர்ரவாரி பாளையம் பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Thirupathi SP
Thirupathi SPpt desk

நேற்று மாலை வனப் பகுதியில் இருந்து ஒரு இருசக்கர வாகனம், கார் ஆகியவை வெளியே வந்தன. இதனை கவனித்த போலீசார், அந்தக் காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில், செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காரில் இருந்த இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் வனப் பகுதியில் இருப்பது தெரியவந்தது .

இதையடுத்து வனப் பகுதியில் இருந்த 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள், ஆறு இருசக்கர வாகனம், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

Red Sandalwood Smuggling
Red Sandalwood Smugglingpt desk

இவர்களுக்கு திருப்பதியைச் சேர்ந்த மேலும் இருவர் உடந்தையாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திருப்பதியைச் சேர்ந்த அந்த நபர் உட்பட 13 பேரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com