மினி பஸ், ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர்.
புனேவில் உள்ள பலேவாடி பகுதியை சேர்ந்த மூன்று குடும்பத்தினர் சேர்ந்து, கொங்கன் கடல் பகுதியான கண்பதிபுலே கோயிலுக்கு ஒரு மினி பஸ்சில் சென்றனர். மொத்தம் 17 பேர் அதில் பயணம் செய்தனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு பலேவாடிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மினி பஸ், பஞ்ச்கங்கா ஆற்றின் சிவாஜி பாலத்தில் நேற்று நள்ளிரவு வந்துகொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி கோலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இதில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர். மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி பஸ் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.