கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் பலி - 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் பலி - 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்
கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் பலி - 13 அதிகாரிகள் சஸ்பெண்ட்
Published on

உத்தரகண்டில் கள்ளச் சாராயம் அருந்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

உத்தரகண்டின் ஹரித்துவார் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அருந்திய 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடியவர்களை மீட்டு பாக்வன்பூர், ஜப்ரெதா, ரூர்கி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பாதிக்கப்பட்டவர்கள் பல்லுபூர், பிந்து காடக், பினரசி, பால்ஸ்வாகஜ், தாகோவாலி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சட்டவிரோத மது உற்பத்தியின் பின்னால் உள்ளவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை. ராஜ்குமார், ஜஸ்வீர், விஷ்வாஸ், சரண் சிங், சஞ்சய், தனிராம், மன்கே ராம், சுராஜ், தயான் சிங், சந்திரா, கியான் சிங், ஜஹாரு ஆகிய உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போன 13 அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து கூடுதல் காவல் ஆணையர் அர்ச்சனா கேஹார்வார் உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். தேஜ்பூர் கிராமத்தில் காவல் ஆய்வாளர் அஜய் ரவுதலா, மாவட்ட நீதிபதி தீபக் ராவத் மற்றும் காவல்துறை மூத்த அதிகாரி ஜன்மஜேய் கந்தூரி ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com