திருடனிடம் இருந்து அம்மாவின் நெக்லஸை மீட்க உதவிய துணிச்சல் சிறுவன்!

திருடனிடம் இருந்து அம்மாவின் நெக்லஸை மீட்க உதவிய துணிச்சல் சிறுவன்!
திருடனிடம் இருந்து அம்மாவின் நெக்லஸை மீட்க உதவிய துணிச்சல் சிறுவன்!
Published on

அம்மாவின் நெக்லஸை திருடியவன், 11 ஆம் வகுப்பு சிறுவனின் துணிச்சலால் பிடிபட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பை அருகிலுள்ள விரார் பகுதியில் தபோவன் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் மனைவி திவ்யா. மகன் தனிஷ் மகதிக் (Tanish Mahadik ). வயது 11. அருகில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பிரபாகர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். திவ்யா வெளியே சென்றிருந்தார்.

தனிஷ் மதிய உணவுக்காக, வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், எலெக்ட்ரிஷியன் என்றும் வீட்டில் ஒயரை சோதனை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். ’அம்மா வீட்டில் இல்லை, பிறகு வாருங்கள்’ என்றான் தனிஷ். அதைக் கேட்காத அவர், அவனை படுக்கறையில் தள்ளி கொன்றுவிடுவதாக மிரட்டினார். பீரோவில் இருந்த ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிவிட்டு தப்பியோடினார். 

திருடனை பிடிக்க முயன்றான் சிறுவன். முடியவில்லை. பிறகு, ’திருடன், அவனைப் பிடிங்க’ என்று கத்தினான். அதற்குள் திவ்யா குடியிருப்பின் மாடியில் ஏறிக்கொண்டிருந்தார். மகனின் சத்தம் கேட்டு, அந்த திருடனை பிடித்து, இழுத்தாள். ஆனால் திவ்யாவை படியில் தள்ளிவிட்டு ஓடினான் திருடன். இதில் திவ்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சிறுவன் தொடர்ந்து கத்தியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவனை அமுக்கினர். கையை கட்டி, சரமாரியா கத் தாக்கினர். பின்னர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து கைது செய்து விசாரித்தனர். அது அப்துல் கான் (52) என்பதும் அவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

திருடனை பிடிக்கத் துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் தனிஷ் கூறும்போது, ‘’அந்த நெக்லஸ் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. அதை திருடன் திருடிச் சென்றுவிடாமல் தடுக்க நினைத்து போராடினேன். நல்ல வேளை அந்த திருடன் என்னை அடிக்கவில்லை’’ என்றான். 

அந்த சிறுவனின் துணிச்சலை போலீசாரும் அக்கம் பக்கத்தினரும் பாராட்டினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com