வடக்கு ஈரானின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்னும் நகரில் செவ்வாய் கிழமை அன்று திருமண விழா ஒன்று நடைபெற்றது.
இதில் ஏராளாமானோ கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் கட்டிடத்தின் கூரைகள் இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தால் அங்கே இருந்து வெளியேற முடியாமல் தடுமாறிய நிலையில் பலர் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக 100 பேர் பலி ஆகியுள்ளனர் அதோடு 150 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தால் காயமடந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர். சிவில் பாதுகாப்பு அதிகரிகள் தங்களது முதற்கட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கையில், “ திருமணத்தின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதே இதற்கு காரணம். குறைந்த விலையிலான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தியதும் தீ விபத்தால் கூரைகள் இடிந்து விழ காரணம்” என்று அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
நினிவே மாகாணத்தின் சுகாதார அதிகரிகள் இது குறித்து கூறுகையில், "அல்-ஹம்தானியாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் இறந்துள்ளனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்"என்று ஈராக் பத்திரிகை நிறுவனமான INA வுக்கு தெரிவித்துள்ளனர்.