மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு தரப்புகளில் இருந்து வரும் நிர்பந்தங்களாலும் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வருவதாலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டடுள்ளதாக தெரிகிறது. அந்தந்த மாநிலங்களின் தனி நபர் குறைந்த பட்ச ஊதியத்திற்கு இணையாக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த முடிவை அமல்படுத்துவதால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த நடப்பு நிதியாண்டில் 55 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது