பெயரளவில் நிறுவனம் நடத்தி நிதி மோசடியில் ஈடுபடும் கம்பெனி இயக்குனர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபடும் நிறுவன இயக்குனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற பெயரளவிலான நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகள் தடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. நிறுவன இயக்குனராக 3 ஆண்டுகளுக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தவறுவோர், வேறு நிறுவனப் பொறுப்பில் இருந்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.