இந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்

இந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்
இந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்
Published on

இந்திய பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டில் 10 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவது இலக்கு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 வருடங்களில் இந்திய பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு என பட்ஜெட் தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பலமுறை மத்திய அரசு சார்பில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இந்தியப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், இந்திய உற்பத்தி திறன் 5% ஆக குறைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த நிலையிலும் 5 ட்ரில்லியன் டாலரை கண்டிப்பாக எட்டுவோம் என மத்திய அரசு தரப்பில் குரல்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், “இந்தியாவின் தற்போதைய பொருளாதாரம் 2.7 ட்ரில்லியன் ஆக இருக்கிறது. இதனை 2024ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 2030-32ஆம் ஆண்டுக்குள் இதனை 10 ட்ரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்பதும் இலக்கு” என குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com