கடந்த ஆண்டு அக்டோபரில் 7ஆயிரத்து 606 மின்சார கார்கள் விற்பனையான நிலையில், இந்த அக்டோபரில் 38சதவீதம் உயர்ந்து, 10ஆயிரத்து 534 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக மின்சார கார் விற்பனை சரிவடைந்து வந்த நிலையில், பண்டிகை கால தள்ளுபடி, அதிக வாகன இருப்பு, சுலபமான நிதி வசதி காரணமாக விற்பனை அதிகரித்துள்ளது.
மின்சார கார் சந்தையில் முதல் இடத்தில் இருக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 9 புள்ளி 53 விழுக்காடாக உயர்ந்து, 6 ஆயிரத்து125 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 166 விழுக்காடு உயர்ந்து, 2 ஆயிரத்து 509 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வின்சர் இ.வி. காரின் அறிமுகம் மற்றும் பேட்டரி வாடகைத் திட்டம் ஆகியவை, இந்நிறுவன விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.