கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான செய்தியில், “கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம் கேர் நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் வைப்புத் தொகையாக வழங்கப்படும். குழந்தைகள் 23 வயதை எட்டிய பின் இந்தத்தொகை வழங்கப்படும். அதே போல குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை யார் காப்பது என்பது தொடர்பாக பல வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக கொடுக்கப்படும் என்றும் அவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்கும் எனவும் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.