“ராணுவ வீரர்களுக்கு 1.86 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்படும்” - ராஜ்நாத் சிங் தகவல்

“ராணுவ வீரர்களுக்கு 1.86 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்படும்” - ராஜ்நாத் சிங் தகவல்
“ராணுவ வீரர்களுக்கு 1.86 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்படும்” - ராஜ்நாத் சிங் தகவல்
Published on

இந்திய ராணுவ வீரர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 1.86 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள் தொடர்பாக நேற்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்து பேசிய ராஜ்நாத் சிங், சீனாவில் இருந்து புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் தயாரிக்கும் சாதனங்களை இறக்குமதி செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் புல்லட் புரூஃப் ஜாக்கெட் விநியோகம் செய்பவர்கள், டெண்டரில் ஏதேனும் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கையுடன், உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றார்.

அத்துடன் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார். 2009ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் 3,53,755 புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் பற்றாக்குறை இருந்ததாக கூறிய அவர், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,86,138 புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் ஏப்ரல் மாதம் 2018ஆம் ஆண்டு கூடுதலாக 1,86,138 புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் தயாரிக்க டெண்டர் விடப்பட்டிருப்பதாகவும், இவை 2020ஆம் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என்றார். அத்துடன் எற்கெனவே 10 ஆயிரம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் சோதனைகள் முடிந்து தயார் நிலையில் இருப்பதாகவும், வரும் அக்டோபர் மாதம் மொத்தம் 37 ஆயிரம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துக்கொண்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com