பணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்

பணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்
பணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்
Published on

பணியின்போது ஆயிரத்து 113 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 891 ராணுவ வீரர்கள், 182 விமானப்படை வீரர்கள் மற்றும் 40 கடற்படை வீரர்கள் என தெரிவித்துள்ளார். 

சக வீரர்களால் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரச்னை, மனைவியுடன் கருத்து வேறுபாடு, மன அழுத்தம், நிதிப் பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாக பாதுகாப்புத்துறையின் மனநல ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com