“இந்திய ராணுவம் கிளப்பிவிட்ட பனிமனிதன்” - இந்த‘யெட்டி’ யார்?
இந்திய ராணுவத்தின் திடீர் ட்விட்டால் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது யெட்டி.. அது என்ன யெட்டி எனக் கேட்கிறீர்களா? ஸ்கூபி டூ , டாக்டர் போன்ற படங்களை எல்லாம் நீங்கள் பார்த்திருந்தால் இந்தச் சந்தேகம் வராது. இன்னும் ஞாபகத்துக்கு வரலயா? யெட்டினா வேற ஒன்னும் இல்ல , பனிமனிதன்.
இப்ப எதுக்கு திடீர்னு பனி மனிதன் பற்றி பேச்சு எழுந்திருக்கு ? இமய மலைகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் நம் நாட்டு இராணுவ வீரர்கள் , சில புகைப்படங்களை எடுத்துட்டு வந்திருக்காங்க. அந்தப் புகைப்படங்களில் இருக்கிற காலடித் தடங்கள் ஒரு பனிமனிதனின் தடங்களாக இருக்கலாம் எனத் தங்களோட அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்துல இராணுவம் போட்டிருக்கு. இந்த ட்வீட், உலகம் முழுக்க இருக்க பலராலும் பகிரப்பட்டதோடு, யெட்டி பத்தின பேச்ச மறுபடியும் ஆரம்பிச்சிருக்கு.
என்னதான் இராணுவம் பகிர்ந்திருந்தாலும், காலடி தடத்தோட போட்டோ எடுக்க முடிஞ்ச அவங்களால , யெட்டிய நேர்ல பார்க்க முடியல. அதனால , காலடித் தடம் உண்மையாவே பனி மனுஷனுடையதுதானா அப்படிங்கிற சந்தேகமும் கூடவே வந்திருக்கு. சரி, இத விடுங்க. இதுக்கு முன்னால யாராவது யெட்டிய பாத்திருக்காங்களா ? அதோட போட்டோ இல்ல வீடியோ வந்திருக்கானு கேட்டா, அப்படி எதுவுமே இல்லை. ஆனால் பனிப்பொழிவும் உள்ள சில நாட்டு பழங்குடி மக்கள் யெட்டிக்கு கோயில் கட்டி தெய்வமா வழிபட்ற வழக்கமும் இருக்கு. சில பனிபடர்ந்த இடங்கள்ல நம்ம இராணுவத்துக்கு கிடைச்ச மாதிரி மனித கால் அளவுல மூணு மடங்கு பெரிய சைசுல கால் தடமும் கிடைச்சிருக்கு.
இத்தனை சுவாரஸ்யம் இருக்கிற யெட்டி பத்தி யாருமா ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிக்க முயற்சி பண்ணலயானு நீங்க கேட்கலாம். ஆமா , யெட்டி பத்தின ஆராய்ச்சிகள் நடந்துச்சு. நிறைய பேரு எட்டியோட முடி, எச்சம், நகம்னு ஏதேதோ கொண்டு வந்து காட்டுனாங்க. இத வச்சிக்கிட்டு ஆராய்ச்சியாளர்களும் இமயமலையில சல்லடை போட்டு தேடுனாங்க. ஆனால் அது கரடியோட பாகங்கள்னு உறுதிப்படுத்துனாங்க.
ஆராய்ச்சியாளர்கள் இல்லனு சொன்னாலும் நம்ம சினிமா ஆட்கள் சும்மா இருக்கல. கேட்டதையெல்லாம் வச்சு , யெட்டிக்கு ஒரு உருவம் , கலர் கொடுத்தாங்க. பனி மனிதன் சினி மனிதனா மாறி , ஏகப்பட்ட கார்ட்டூன் கேரக்டர்ல நடிக்க ஆரம்பிச்சாரு. ஸ்கூபி டூ தொடர்ல ஸ்கூபி பனிமனிதனை கொல்லுற காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமால பனிமனிதனை உருவகம் செஞ்ச காட்சிகள் இப்ப வரைக்கும் இல்ல. வர வாய்ப்பிருக்கு.
ஆக , நம்ம இராணுவம் திடீர்னு கிளப்பி விட்டிருக்கிர இந்த யெட்டி, அதாங்க பனி மனிதன் கார்ட்டூன்லயும் , பல பேரோட கனவுகளில் மட்டுமே இருக்காரு. அவ்வப்போது யாராவது காலடித்தடம் , பெரிய உருவம்னு ஏதேதோ ஆதாரங்கள் சொல்வாங்க. ஆனால் அது எதுவும் உறுதிப்படுத்தப்பட்டதா தெரியல.