‘சொமாட்டோ’, ‘ஊபர் ஈட்ஸ்’க்கு எதிராக ட்ரெண்டிங் : வரிந்துகட்டும் நெட்டிசன்கள்

‘சொமாட்டோ’, ‘ஊபர் ஈட்ஸ்’க்கு எதிராக ட்ரெண்டிங் : வரிந்துகட்டும் நெட்டிசன்கள்
‘சொமாட்டோ’, ‘ஊபர் ஈட்ஸ்’க்கு எதிராக ட்ரெண்டிங் : வரிந்துகட்டும் நெட்டிசன்கள்
Published on

சொமாட்டோ மற்றும் ஊபர் ஈஸ்ட் ஆகிய உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த உணவை கேன்சல் செய்தார். அதற்கான காரணத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். அதில், '' இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்கிறேன். நான் உணவு வழங்குபவரை மாற்றக்கோரினேன். ஆனால் அவர்கள் மாற்றவில்லை. என் பணத்தையும் திருப்பித் தரவில்லை. உணவை ஏற்றுக்கொள்ளும்படி என்னை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் திரும்ப வேண்டாம். நான் உணவை கேன்சல் செய்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது ட்வீட்டை குறிப்பிட்டு பதில் அளித்த சொமாட்டோ நிறுவனம் உணவுக்கு மதம் எதுவும் கிடையாது. உணவே ஒரு மதம் தான் எனத் தெரிவித்தது. அத்துடன் தங்கள் நிறுவனம் மூலம் டெலிவரி செய்யப்படும் அசைவ உணவுகள், ஹலால் செய்யப்பட்ட கடைகளில் இருந்து விநியோகிக்கப்படுவதாவும் தெரிவித்திருந்தது. இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பின. 

அத்துடன் நெட்டிசன்கள் சிலர், ‘இதுபோன்று இஸ்லாமியர்கள் சிலர் இந்து டெலிவரி பாய்ஸ் வேண்டாம் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அப்போது அதற்கு சொமோட்டோ எதுவும் கருத்து சொல்லவில்லை. ஆனால் இப்போது குறிப்பிட்டு கூறுவது ஏன் ?’ என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சொமாட்டோவை புறக்கணிப்பதாக #ZomatoUninstalled என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும் சொமாட்டோ செயலியை பதிவிநீக்கம் செய்துவிட்டதாகவும் பலர் ஸ்கீரின் ஷாட் எடுத்து, ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே உணவிற்கு மதமில்லை என சொமாட்டோ தெரிவித்த கருத்திற்கு, ஊபர் ஈட்ஸ் உணவு டெலிவரி நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதில், சொமாட்டோ நிறுவனத்துடன் தாங்கள் நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஊபர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து, ##BoycottUberEats என்பதை ட்ரெண்ட் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com