ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் பாடம் நடத்தணும்..மாணவர்களுக்காக ஒலித்த தோனியின் நெகிழ்ச்சி உரை

ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் பாடம் நடத்தணும்..மாணவர்களுக்காக ஒலித்த தோனியின் நெகிழ்ச்சி உரை
ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் பாடம் நடத்தணும்..மாணவர்களுக்காக ஒலித்த தோனியின் நெகிழ்ச்சி உரை
Published on

”கற்பித்தல் என்பது ஒரு கலை” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, தான் எப்போதும் ஆசிரியர்களின் தீவிர ரசிகனாக இருந்ததாகக் கூறினார்,

தொழில்நுட்பக் கல்வியாளர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்வியாளர் கே.கே.அப்துல் கஃபார் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இவர் தன்னுடைய சுயசரிதை நூலை, ’நான் ஒரு சாட்சி’ ’Njaan Sakshi' (me as the witness) என்ற பெயரில் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா கேரளத்தில் நடைபெற்றது. இதன் முதல் பிரதியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வெளியிட, துபாய் சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி மர்வான் அல் முல்லா பெற்றுக்கொண்டார்.

அப்துல் கஃபாரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு, அம்மாநில ஆளுநரும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தோனி, “மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை, ஆசிரியர் முடிந்தவரை எளிமையாக கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு மாணவருக்கும் கற்றல் திறன் என்பது வேறுபடும். ஆகவே, அவர்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, ஆசிரியர் பணி என்பது ஒரு தொழிலாக இல்லாமல், மாணவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து நெறிப்படுத்தக்கூடிய கலையாகவும் இருக்க வேண்டும். 

நான் ஒருபோதும் கல்லூரிக்குச் சென்றதில்லை. ஆனால் நான் நன்றாகப் படித்தேன் என நினைக்கிறேன். அதைப் பள்ளிக்காலத்திலேயே சிறப்பாகச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். நான், என் பள்ளிக் காலத்தில் எனக்குப் பாடம் புகட்டிய ஆசிரியர்களை விசிறியாகக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி. பேராசிரியர் கஃபார் எழுதியிருக்கும் இந்த சுயசரிதை, அவருடைய பயணம் மற்றும் பல ஆண்டுகளாக கல்வித் துறையில் சாதித்துக் காட்டியதை எடுத்துரைக்கிறது. இந்த நூல் மாணவர்களுக்கு ஒரு நுண்ணறிவு நூலாக விளங்கும்” எனத் தெரிவித்தார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com