”கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களில் தமிழ் மொழியும் இடம்பெறும்” - மத்திய அரசு

”கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களில் தமிழ் மொழியும் இடம்பெறும்” - மத்திய அரசு
”கோவின் இணையதளத்தில் இரண்டு நாட்களில் தமிழ் மொழியும் இடம்பெறும்” - மத்திய அரசு
Published on

கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கண்டனங்கள் எழுந்ததையடுத்து ”அடுத்த இரண்டு நாட்களில் தமிழ் மொழியும் இடம்பெறும்” என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கோவின் என்ற இணையளத்தில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் விவரங்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 9 மாநில மொழிகளில் விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் இதில் தமிழ் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்குமாறு தமிழக அரசுத் தரப்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவின் தளத்தில் மேலும் பல மொழிகள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஓரிரு நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என்றும் ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ் வழியில் கோவின் தளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சில தினங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கோவின் தளத்தில் தமிழ் இடம் பெறாதது ஏமாற்றம் தருவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தமிழ் உடனே இடம் பெற வழி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com