சுரங்கத்தில் சிக்கிய 13 பேரை, எப்படியும் மீட்போம்: தேசிய பேரிடர் அதிகாரி தகவல்

சுரங்கத்தில் சிக்கிய 13 பேரை, எப்படியும் மீட்போம்: தேசிய பேரிடர் அதிகாரி தகவல்
சுரங்கத்தில் சிக்கிய 13 பேரை, எப்படியும் மீட்போம்: தேசிய பேரிடர் அதிகாரி தகவல்
Published on

சுரங்க விபத்தில் சிக்கிய 13 பேரையும் உயிருடனோ, பிணமாகவோ எப்படியும் மீட்போம் என்று தேசிய பேரிடம் மீட்புக் குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களால் நீர் மாசு ஏற்படுவதாகச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியதை அடுத்து, நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014 ஆம் ஆண்டு தடைவிதித்தது. இருந்தாலும் அங்கு சட்டவிரோதமாக, நிலத்துக்கு அடியில் எலிவளை போல துளையிட்டு யாருக்கும் தெரியாமல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் மேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. தண்ணீர் நுழைந்ததும் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் வெளியேறினர். மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருப் பதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீசாரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுமார் 100 பேரும் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. ஆழமான இந்த சுரங்கத்தில் 70 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதை வெளியேற்றும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

கைவிடப்பட்ட அந்த நிலக்கரி சுரங்கம், கடந்த மாதம்தான் சட்ட விரோதமாக செயல்பட துவங்கியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதை நடத்தி வந்த லும்தாரி கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சுக்லைன் தலைமறைவாகி விட்டார். இவரது கூட்டாளியான ஜிரின் சுல்லர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று மாநில முதலமைச்சர் கான்ராட் கே. சங்க்மா தெரிவித்துள்ளார்.

‘சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழு பல நவீன உபகரணங்களை கொண்டு வந்துள்ளது. அதன்மூலம் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறோம். துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த உடலையும் நாங்கள் பார்க்க முடியவில்லை. ஆற்றின் தண்ணீர் சுரங்கத்துக்குள் செல்வதால் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் எங்கள் சவாலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார் கிழக்கு ஜைன்டியா ஹில்ஸ் எஸ்.பி சில்வெஸ்டர் நாங்டின்ஞ்சர்.

இந்நிலையில் இவ்வளவு நாள் ஆகிவிட்ட நிலையில் மீட்பு பணி இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதிகமான பம்புகள் மூலம், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போதுதான் அந்தச் சுரங்கத்தின் அருகே தண்ணீர் அளவு குறைந் துள்ளது. இந்நிலையில் சிக்கிக்கொண்ட அனைவரும் உணவு, தண்ணீர் இல்லாமல் இவ்வளவு நாள் உயிரோடு இருப்பார்களா? என்று சந்தேகமும் எழுந்துள்ளது.

’‘தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு இது அதிக சவாலான பணி’’ என்று அந்த குழுவின் கமாண்டன்ட் எஸ்.கே.சாஸ்திரி தெரிவித் துள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, ’’இதுபோன்ற எலிவளை (Rat hole mines) சுரங்கங்களுக்குள் செல்ல போதுமான பாதுகாப்பு உபகர ணங்கள் இல்லை. இருந்தாலும் உயிருடனோ, பிணமாகவோ அவர்களை மீட்போம் என்று நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com