’மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்களி’ன் வித்தியாசமான தசரா விழா!

’மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்களி’ன் வித்தியாசமான தசரா விழா!
’மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்களி’ன் வித்தியாசமான தசரா விழா!
Published on

அவுரங்காபாத்தில் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தசரா விழாவை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.

தசரா பண்டிகையை ஒட்டி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கரோலி கிராமத்தில் மனைவிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ராவண னுக்கு பதில் சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடியுள்ளனர்.

இதுபற்றி இந்த சங்கத்தின் நிறுவனர் பாரத் புலாரே கூறும்போது, ’இந்தியாவில் சட்டங்கள் ஆண்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு சாதகமாக வுமே உள்ளன. இதை தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும் மாமியார்களையும் துன்புறுத்துகிறார்கள். கணவர்களுக்கு எதிரான இந்த கொடுமை யை நாங்கள் கண்டிக்கிறோம். அதன் அடையாளமாக எங்கள் அமைப்பு சூப்பனகையின் உருவபொம்மையை எரிக்கிறது. 

இந்து புராணக் கதைப்படி ராமன் - ராவணன் இடையே யுத்தம் தொடங்க, முக்கிய காரணமாக இருந்தவர் சூர்ப்பனகை. ராவணனின் தங்கையான அவர், ராமன் மீது காதல் கொண்டதால் லட்சுமணன் அவளின் மூக்கை அறுத்து அனுப்பினான். இதையடுத்து ராவணன், சீதையை கடத்தினான். சீதையை மீட்க நடந்த போரில் ராமனால், ராவணன் வதம் செய்யப்பட்டான்.

தசரா விழாவில், தீமையை அழித்து நன்மை வெல்வதை குறிக்கும் வகையில் ராவண வதம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால், நாங்கள் மனைவிகளின் கொடுமைகளை எரிப்பதாக நினைத்து சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிக்கிறோம். ஆண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த சங்கத்தையும் ஆரம்பித்துள்ளோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com