பாலியல் வன்கொடுமை குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஹரியானா ஆசிரமத்தில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ரோதக் சிறையில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 25.08.2017 அன்று ராம் ரஹீமை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹரியானாவின் சிர்சா பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 38 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன.
இன்று தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ஹெலிகாப்டரில் வந்து தண்டனை விவரங்களை அறிவித்தார். தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பு ராம் ரஹீம் மன்னிப்பு கோரி கண்ணீர்விட்டு அழுதார்.
ராம் ரஹீமுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற வடமாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.