“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு

“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு
“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு
Published on

காங்கிரஸ் சின்னத்தை தவிர்த்து மற்ற சின்னத்திற்கு வாக்களித்தால் ஷாக் அடிக்கும் என சத்தீஸ்கரில் காங்கிரஸ் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல இடங்களில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை ஒரே நாளில் ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கரில் ஏற்கனவே முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வாக்குச் சேகரித்த காங்கிரஸ் அமைச்சர் கவாஸி லக்மாவின் பேச்சு அங்கு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

பிரச்சாத்தின் போது அவர், “காங்கிரஸ் சின்னம் வாக்கு இயந்திரத்தில் முதல் இடத்தில் உள்ளது. அதை தவிர்த்து நீங்கள் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால், உங்களுக்கு ஷாக் அடிக்கும். எனவே நீங்கள் முதலிலுள்ள காங்கிரஸின் கை சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இவரது இந்த பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனால் லக்மா விளக்கமளிக்கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com