ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை, உங்கள் வாய் குப்பைத்தொட்டியை போல் உள்ளது என்றும், உங்களால் குப்பைத்தொட்டியை மிஞ்ச முடியாது என்றும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நடிகர் பவன்கல்யாண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு.
ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கும் நடிகை ரோஜா, சமீப காலமாக ஜன சேனா கட்சி குறித்தும், பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவி குடும்பத்தினர் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் இருவரின் சகோதரருமாகிய நாகபாபு, கடுமையான விமர்சனங்களால் ரோஜாவை தாக்கி உள்ளார். அந்த வீடியோவிற்கு பிறகு #KuppaThottiRoja என்ற ஹேஸ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
முன்னதாக ஜன சேனா கட்சி குறித்தும், நடிகர் பவன் கல்யாண் குடும்பம் குறித்தும் விமர்சித்து பேசிய அமைச்சர் ரோஜா, ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர்., எந்த நிலையில் இருந்தாலும் சரி, மக்களுக்கு சேவை செய்யவே முதல்வர் ஆனார்கள். ஆனால் இந்த குடும்பத்தில் உள்ள யாரும் ஏன் சொந்த மாவட்டத்தில் கூட தங்களை, அந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு உதவவில்லை” என ரோஜா விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். ரோஜாவின் இந்த விமர்சனம் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. மேலும் சிரஞ்சீவி ரசிகர்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சர் ரோஜாவின் தொடர் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரரான நாகபாபு, ”குப்பைத்தொட்டியை போல் பேசாதீர்கள், உங்களுக்கும் குப்பைத் தொட்டிக்கும் வித்தியாசமில்லாமல் இருக்கிறது, முதலில் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில் உங்கள் பொறுப்புகளை சரியாக செய்யுங்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “அமைச்சர் ரோஜா, இந்தியாவின் சுற்றுலாத் துறை தரவரிசை பட்டியலில் உள்ள 20 இடங்களில், கேரளா, அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களே முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஆனால் அதில் ஆந்திரா 18வது இடத்தில் இருக்கிறது. இப்படி உங்கள் பொறுப்பை மறந்து செயல்பட்டால் இந்த இடத்தில் தான் இருக்கும். ஆந்திர சுற்றுலாத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சில ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை கொண்டுள்ளனர். இந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு வந்ததும் அவர்களின் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. நீங்கள் பைத்தியம் போல் பேசினால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். முதலில் சுற்றுலாத்துறை அமைச்சராக உங்களது பொறுப்புகளை தெரிந்துகொள்ளுங்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் என்றால் நீங்கள் சுற்றுலா செல்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. "சுற்றுலா துறையை எப்படி மேம்படுத்துவது என்பதை நாம் பார்க்க வேண்டும்" என்று அவர் கடுமையாக சாடினார்.
மேலும் ”என் மூத்த சகோதரர் சிரஞ்சீவியையும், தம்பி பவன் கல்யாணையும் பற்றி இவ்வளவு நாள் பேசினாலும், என் சகோதரர்களுக்காக தான் பேசாமல் இருந்தேன். மற்றபடி என்னைப் பற்றி பேசுங்கள், நான் கவலை படமாட்டேன். என் தலைவர் பவன் கல்யாணும், என் மூத்த சகோதரர் சிரஞ்சீவியும் பற்றி பேசும் போது கூட நான் எதிர்வினையாற்றாமல் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் இருக்கிறது. அது “உங்களது வாய்க்கும் முனிசிபல் குப்பைத்தொட்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை” என்பதால் தான். நீங்கள் முனிசிபாலிட்டி குப்பைத்தொட்டியை போல் அசையாமல் இருக்காமல், எப்படி சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது என்று பாருங்கள்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

రోజా నీ నోటి కి మునిసిపాలిటీ చెత్తకుప్పకు తేడాలేదు - Nagababu Comments on Minister RK Roja

Watch Here >> https://t.co/D1CuHylE2n#Roja #NagaBabu #Janasena #Pawankalyan #YCP #NTVTelugu #NTVNews pic.twitter.com/Gr8PZ0jlww
— NTV Telugu (@NtvTeluguLive) January 7, 2023

நாகபாபுவின் இந்த வீடியோ தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும், மற்றும் #KuppaThottiRoja என்ற ஹேஸ்டேக்குகள் அதிகளவில் பகிரப்பட்டும் வருகிறது. மேலும் அமைச்சர் ரோஜாவின் கருத்துக்கு பதிலளித்து பேசியிருக்கும் ரசிகர்கள், “சிரஞ்சீவி சேவை மனப்பான்மையும், உதவும் குணமும் உள்ள திறந்த புத்தகம். அவரை விமர்சித்து மக்களின் மதிப்பை இழக்காதீர்கள்” என்று தெரிவித்து வருகின்றனர்.