“சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்

 “சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்
 “சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்
Published on

சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்க வரும் பணியாளருக்கு டிப்ஸ் தர வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் கட்டணத்தை வலுக்கட்டாயமாக வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்  ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்க வரும் பணியாளருக்கு டிப்ஸ் தர வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின் சமையலறை வரை சிலிண்டர் வரும் வரைக்கானது என்பதால், டிப்ஸ் தரத் தேவையில்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மாறாக, கூடுதலாக தொகை கேட்கப்பட்டால் இண்டேன் நிறுவன வாடிக்கையாளர் சேவை எண்ணில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com