தன்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதில் தெரிவித்துள்ளார்.
விமர்சனம் செய்வதும் அழிப்பதும் எளிது, ஆனால் ஓர் அமைப்பை சிறப்பாகச் செயல்படத் தக்க வகையில் மாற்றியமைப்பது என்பது மிகவும் கடினம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார். சில நீதிபதிகளுக்கே குறிப்பிட்ட வழக்குகளை ஒதுக்குவதாக மூத்த நீதிபதிகள் சிலர் அதிருப்தி தெரிவித்த பிறகு, முதல் முறையாக தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய தீபக் மிஸ்ரா, பொறுப்புடன் கூடிய நேர்மறையான, உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.