மத்திய பிரதேசத்தில் ப்ளூ வேல் மொபைல் விளையாட்டை விளையாடி வந்த 13 வயது சிறுவன், பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சமேலி தேவி பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவனுக்கு உளவியல் ரீதியிலான மருத்துவ ஆலோசனை வழங்க, காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். திகில் படங்களை தனியாக அமர்ந்து பார்ப்பது, உடலில் சுறாவின் உருவத்தை வரைந்து கொள்வது என ஆரம்பித்து கடைசியாக தற்கொலை செய்து கொள்வது என இந்த விளையாட்டு முடிகிறது.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த விளையாட்டால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.