கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்

கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்
கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்
Published on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி மைதானத்தில் இளைஞர்கள் தமிழக விவசாயிகளுக்கு
ஆதரவாக பதாகைகள் ஏந்தி அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள்
தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக
நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
டெல்டா பகுதிகளை நோக்கி நிவாரணப்பொருட்கள் சென்றுகொண்டிருக்கின்றன.

இதனிடையே இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி
மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி
அங்கிருந்தவர்களின் கவனங்களை ஈர்த்தனர். அதில் ”save delta, save tamilnadu farmers” என எழுதப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com