மெய்சிலிர்க்கும் அழகும் ஆபத்துமான இமாச்சலப்பிரதேச சாலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மலைச்சாலைகள் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றவை. இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் இமாச்சலப்பிரதேச சாலைகளை அதிகம் விரும்புவர். ஒருபுறம் மலைகள், மறுபுறம் பள்ளத்தாக்கு என த்ரிலை விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு இமாச்சலப்பிரதேச சாலைகள் வரப்பிரசாதம். இந்நிலையில் அந்த மெய்சிலிர்க்கும் அழகும் ஆபத்துமான இமாச்சலப்பிரதேச சாலையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2019, ஜூலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில்,அழகான இந்தியா. கடுமையான பாதைகள் அழகான முடிவுகளை கொண்டிருக்கும். இது வழக்கமான பாதை அல்ல. வருடத்திற்கு 8-9 மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள், அழகும் ஆபத்துமான இடம் என்றும், இது அபாயம் தான் ஆனால் த்ரில்லான வழி எனவும் பதிவிட்டுள்ளனர்.