ஒன்றும் தெரியாமல் பேசக்கூடாது: நானா படேகர் மீது ராஜ் தாக்கரே பாய்ச்சல்!

ஒன்றும் தெரியாமல் பேசக்கூடாது: நானா படேகர் மீது ராஜ் தாக்கரே பாய்ச்சல்!
ஒன்றும் தெரியாமல் பேசக்கூடாது: நானா படேகர் மீது ராஜ் தாக்கரே பாய்ச்சல்!
Published on

நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசிய நடிகர் நானா படேகருக்கு நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் நானா படேகர். இவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தில் இயக்குனராக நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், இப்போது ’காலா’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடைபாதை வியாபாரிகளே காரணம் என நவநிர்மாண் சேனா கட்சியினர் குற்றம் சாட்டினர். இதைக் காரணமாக வைத்து அவர்களின் பொருட்களையும் சூறையாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நானா படேகர் நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

’நடைபாதை வியாபாரிகள் வயிற்றுப் பிழைப்பிற்காக தொழில் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காதது அரசு மற்றும் மாநகராட்சியின் தவறு’ என்று கூறியிருந்தார். இதற்கு நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

’நானா படேகர் நல்ல நடிகர். ஆனால் ஒன்றும் தெரியாமல் எதை பற்றியும் அவர் பேசக்கூடாது. நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்துவது அரசின் வேலை என அவர் நினைத்தால், அவர் ஏன் நாம் (NAAM) என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் கடமை தான். அதற்காக ஏன் அவர் அந்தத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்? நடைபாதை வியாபாரிகள் ஏழைகள் என்கிறார், தினமும் ரயில் செல்பவர்களும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் அல்ல’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com