ஆஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட ட்வீட்டிற்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் உள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு இடையில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அந்தவகையில் அவர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்சனை சந்தித்தார். அப்போது இருவரும் செல்ஃபி படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எத்தனை நல்லவர் மோடி” என்று இந்தியில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,“நமது இரு நாடுகளின் உறவு என்னை மிகவும் உற்சாகம் அடைய வைத்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் இந்த இரு தலைவர்களும் தங்கள் நாட்டில் நடைபெற்றிருந்த தேர்தலில் வெற்றிப்பெற்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டனர். அதன்பின்னர் இவர்கள் இருவரும் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.