துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய பெண்ணுக்கு திருமணம்

துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய பெண்ணுக்கு திருமணம்
துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய பெண்ணுக்கு திருமணம்
Published on

துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. 

உத்தரபிரதேச மாநிலம், ஹமிபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வர்ஷா. இவர் அசோக் யாதவ் என்பவரை காதலித்து வந்தார். மே, 15-ம் தேதி அசோக்கிற்கும் வேறு பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைக் கேள்விபட்டதும் டென்ஷன் ஆன வர்ஷா, திருமணம் நடக்க இருந்த இடத்திற்கு சென்று, அசோக் யாதவை துப்பாக்கியை வைத்து மிரட்டினார். துப்பாக்கி முனையில் அவரைக் கடத்திச் சென்றார். திருமணம் நடக்க இருந்த பெண்ணின் தந்தையான லாலு என்பவர், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அசோக் யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாப்பிள்ளையை துப்பாக்கி முனையில் கடத்திய வர்ஷா , மாநிலம் முழுவதும் பிரபலமடைந்தார். அவர், ரிவால்வர் ராணி என்று அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் அசோக் யாதவ் குடும்பத்தினர் அவரை கை கழுவி விட்டனர். வர்ஷா, அசோக்கை ஜாமினில் எடுத்தார். பின்னர் ஹமிபூர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்குத் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிவசேனா செய்து இருந்தது.  ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களை காப்பாற்ற வர்ஷா தலைமையில் தொண்டு நிறுவனம் தொடங்கப்படும் என்றும் சிவசேனா அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com