’இழப்பீட்டை வைத்து என்ன செய்வது?’ உ.பி.யில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் மகன் கேள்வி

’இழப்பீட்டை வைத்து என்ன செய்வது?’ உ.பி.யில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் மகன் கேள்வி
’இழப்பீட்டை வைத்து என்ன செய்வது?’ உ.பி.யில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் மகன் கேள்வி
Published on

’’போலீசாரால் தங்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்’’ என்று உ.பி. கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளின் மகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள மஹ்வா கிராமத்தின் வனப் பகுதி யில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, சட்டவிரோத பசு வதைக்கூடம் செயல்படுவதாக் கூறி கிராமத்திற்குள் திரண்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் ஈரம் காய்வதற்குள் இன்னொரு போலீஸ்காரரும் அங்கு நேற்று கொல்லப்பட்டுள்ளார்.

இங்குள்ள காஜிபுர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவருடன் மாநில முதலமைச்சர் ஆதித்யாநாத்தும் கலந்துகொண்டார். நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்கள் சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பிலும் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட அளவில் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து பிரதமர் சென்றபின், அதில் பங்கேற்ற பாஜக தொண்டர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிஷாத் கட்சியினர், அவர்கள் மீது கல்வீசி தாக்கினர். போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது, பிரதமர் பாதுகாப்புக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த போலீசார் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

(சுரேந்திர வட்ஸ்)

இதில் சுரேந்திர வட்ஸ் (45) என்ற போலீஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 போலீசார் காயம் அடைந்தனர். இதை யடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிள் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தங்கள் கட்சி தொண்டர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும் உ.பி.முதல்வர் இதுபற்றி விரிவான விசார ணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் நிஷாத் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிளின் மகன், விபி.சிங் கூறும்போது, ‘’போலீசாரால் தங்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என் றால், அவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இதற்கு முன் புலந்த்ஷரில் இப்படித்தான் நடந்தது? இழப்பீட்டை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com