தேங்கியிருக்கும் வழக்குகள் களங்கத்தை ஏற்படுத்துகின்றன: நீதிபதி ரஞ்சன் கோகோய்

தேங்கியிருக்கும் வழக்குகள் களங்கத்தை ஏற்படுத்துகின்றன: நீதிபதி ரஞ்சன் கோகோய்
தேங்கியிருக்கும் வழக்குகள் களங்கத்தை ஏற்படுத்துகின்றன: நீதிபதி ரஞ்சன் கோகோய்
Published on

நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகள் பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாக தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலம் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவிற்கு வருகிறது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அக்டோபர் 3-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இளம் வழக்கறிஞர்கள் சங்கதத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ரஞ்சன் கோகோய், வழக்குகள் தேங்கி இருப்பது குறித்தது கவலை தெரிவித்துள்ளார்.

சிவில் வழக்குகளை பொருத்தவரை இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு பிறகே தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், குற்ற வழக்குகளை பொருத்தவரை குற்றம்சாட்டப்பட்டவரின் காலம் முடிந்த பிறகுதான் வழக்கு விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகள் பெரும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்த அவர் இதனை சமாளிக்க தன்னிடம் திட்டங்கள் இருப்பதாகவும் அதனை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com