போராடியும் எனக்கான நீதி மறுக்கப்பட்டிருகிறது : தலைமை நீதிபதி மீது புகாரளித்த பெண்

போராடியும் எனக்கான நீதி மறுக்கப்பட்டிருகிறது : தலைமை நீதிபதி மீது புகாரளித்த பெண்
போராடியும் எனக்கான நீதி மறுக்கப்பட்டிருகிறது : தலைமை நீதிபதி மீது புகாரளித்த பெண்
Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற உள் விசாரணை குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நீதிபதிகள் பாப்டே, இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி புகாரை விசாரித்தனர். விசாரணை முடிந்து நீதிபதிகள் இந்தப் பாலியல் புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி புகாரை தள்ளுபடி செய்தனர். 

இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணுடன் பத்திரிகையாளர்கள் சிலர் உரையாடினர். அதில் அப் பெண் உச்சநீதிமன்ற உள் விசாரணைக் குழுவின் விசாரணை குறித்தும் அவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், “நான் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் புகார் அளித்தது அவர்கள் உண்மையை கண்டறிவார்கள் என நினைத்தால் தான். ஆனால் நான் தலைமை நீதிபதி மீது தவறான குற்றச்சாட்டு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அது முற்றிலும் தவறானது. ஏனென்றால் நான் அளித்த புகாரில் அனைத்து ஆதரங்களையும் சேர்த்து தான் கொடுத்திருந்தேன். அத்துடன் என் மீது கடந்த 2016ஆம் ஆண்டு இருந்த வழக்கை வைத்து நான் குற்றப் பிண்ணனி உடையவர் எனச் சித்தரிக்க முயன்றுள்ளனர். 

உச்சநீதிமன்ற உள் விசாரணை குழுவின் நோட்டீஸ் வந்தவுடன் நான் அவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். அதாவது என்னுடன் விசாரணைக்கு ஒரு நபர் வர அனுமதிக்கவேண்டும். அத்துடன் இந்த விசாரணை முழுவதும் பாலியல் புகார்களை விசாரிக்கும் ‘விசாகா’ நெறிமுறைகள் பின்பற்றி விசாரிக்கவேண்டும். மேலும் இந்த விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தேன். எனக்கு சற்று காது கேட்பதில் குறைபாடு இருந்ததால் என்னுடன் ஒருவர் உதவிக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தேன். ஆனால் அதனை விசாரணைக்கு குழு ஏற்க மறுத்துவிட்டது.

முதல் நாள் விசாரணைக்கு சென்ற போது நீதிபதி பாப்டே, “இது பாலியல் புகாரை விசாரிக்கும் குழு அல்ல. அத்துடன் இது நீதிமன்றத்தின் உள்விசாரணை குழுவும் இல்லை. உங்களின் புகார் குறித்து ஆராய்வதற்கான குழுதான் இது. அதனால் நீங்கள் எங்களிடன் தைரியமாக நடந்தவற்றை கூறலாம்” எனக் கூறினார். மேலும் என்னை பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர் ஆகியவர்களிடம் பேச வேண்டாம் என வலியுறுத்தினர். முதல் நாள் விசாரணையில் என்னிடம் பாலியல் புகார் குறித்து ஒரு சில கேள்விகளே கேட்டனர். குறிப்பாக நான் தலைமை நீதிபதியின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவி காலில் விழுந்த வீடியோவை யார் எடுத்தார் என கேட்டனர். அதேபோல பாலியல் தொந்தரவு நடைபெற்ற நேரம் என்னவென்றும் அப்போது நான் அணிந்திருந்த உடை என்னவென்றும் கேட்டனர். மேலும் தலைமை நீதிபதி செயலாளரிடம் எனது கணவர் உரையாடியதை யார் ரெகார்டு செய்தது என்றும் கேட்டனர். 

அதன்பிறகு ஏன் இவ்வளவு நாட்கள் பணி நீக்கத்திற்கு எதிராக முறையிடவில்லை எனக் கேட்டனர். இதனையடுத்து இரண்டாவது நாள் விசாரணையில் அவர்கள் என்னிடம் கடினமாக நடந்து கொண்டனர். அத்துடன் முதல் நாள் விசாரணை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது என்னை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பின் தொடர்ந்தனர் என விசாரணை குழுவிடும் நான் தெரிவித்தேன். அதற்கு நீதிபதிகள், உங்கள் குடும்பத்தில் நிறையே காவல்துறையினர் உள்ளனர். அவர்களுக்கு உங்களை பாதுகாக்க தெரியும் எனக் கூறினர். இந்த மொத்த விசாரணையில் நீதிபதி இந்திரா பானர்ஜி சரியாக கலந்துக் கொள்ளவில்லை. அதேபோல இந்து மல்கோத்ரா ஒரு சில கேள்விகள் மட்டுமே கேட்டார். இரண்டாவது நாளில் நான் மீண்டும் என்னுடன் வழக்கறிஞர் அல்லது வெறு ஒரு நபர் வரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். இதற்கு நீதிபதிகள் மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நான் விசாரணை குழுவின் விசாரணையில் இருந்து விலக போகிறேன் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ஏன் விலகுகிறீர்கள். இதுவரை நீங்கள் சரியாக தான் ஒத்துழைப்பு கொடுத்துவந்தீர்கள் எனக் கூறினார்கள். நான் இதனை ஏற்க மறுத்தையடுத்து நீதிபதிகள் நீங்கள் விலகினால் நாங்கள் விசாரணை தொடருவோம் எனத் தெரிவித்தனர். நான் அதற்கு ஒத்துகொண்டு விலகினேன். 

இந்த விசாரணை சரியாக பதிவும் செய்யப்படவில்லை. ஏனென்றால் என்னிடம் நீதிபதிகள் கேள்வி கேட்கப்பட்ட கேள்விகள் அதற்கு நான் அளித்த பதில்கள் ஆகியவற்றை நீதிபதி பாப்டே அங்கிருந்து தட்டச்சு பணியாளரிடம் சுருக்கி கூற அவர் அதனை பதிவு செய்தார். இதனால் விசாரணை சரியாக பதிவு செய்யப்படவில்லை என்பது எனக்கு தெரியவந்தது. 

நான் விசாரணையிலிருந்து விலகிய பின்பு அந்த குழு யாரை விசாரித்து என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மட்டும் விசாரணை குழுவில் ஆஜரானர் எனத் செய்திதாளகள் மூலம் எனக்கு தெரியவந்தது. அதேபோல விசாரணை குழுவின் தீர்ப்பு எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அவர்கள் இந்த புகாரில் எவ்வித முகாந்திரம் இல்லை எனக் கூறியிருக்கின்றனர். அப்படியென்றால் நான் கொடுத்த ஆடியோ வீடியோ ஆதாரங்களை அவர்கள் விசாரித்தார்களா. மேலும் விசாரணை குழு டெல்லி காவல்துறை காவலரை அழைத்து விசாரித்தார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இந்தப் புகாருக்காக நான் என்னிடம் இருந்த அனைத்தையும் இழந்துவிட்டேன். என்னுடன் எனது குடும்பத்தினரும் மிகுந்த துயரத்தை சந்தித்து விட்டனர். டெல்லியிலுள்ள என்னுடை வீடு மட்டும் ராஜஸ்தானிலுள்ள என்னுடைய உறவினர்கள் வீடு ஆகியவற்றில் ஆடையாளம் தெரியாத நபர்கள் வந்து விசாரணை செய்துள்ளனர். அத்துடன் என்னைப் பற்றி  பலரிடமும் விசாரித்துள்ளது எனக்கு தெரியவந்துள்ளது. எனது புகாரை தள்ளுபடி செய்ததன் மூலம் நான் மிகவுன் நேசித்த நீதிதுறை மீதான எனது நம்பிக்கை குறைந்துவிட்டது. அதேபோல ஒரு பட்டியலின பெண்ணாக நான் இவ்வளவு தூரம் போராடியும் எனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Courtesy: Scroll.in 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com