தன்னை நிறுத்த முயன்ற சுங்க சாவடி ஊழியரை, காரின் முன் பகுதியில் வைத்து 6 கிலோ மீட்டர் தூரம் ஒருவர் விரட்டிய சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது.
சுங்க சாவடியில் பல அடிதடிகள் மோதல்கள் மற்றும் சில சுவராஸ்யமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ள சுங்க சாவடியில் ஒரு பதற்றமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹாரியானா மாநிலம் குருகிராம் அருகிலுள்ள சுங்க சாவடிக்கு இன்னோவா கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அந்தக் கார் சுங்க சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல முற்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் அந்தக் காரை நிறுத்த முயன்றுள்ளார். அதற்காக அவர் காரின் முன் பகுதிக்கு வந்தார். அந்த நேரத்தில் காரின் ஒட்டுநர் நிறுத்தாமல் அதிக வேகத்துடன் காரை இயக்க தொடங்கினார். இதனால் சுங்க சாவடி ஊழியர் காரின் முன்பகுதியில் தூக்கி செல்லப்பட்டார். ஊழியர் முன்பகுதியில் பிடித்துக் கொண்டு தொங்கிய நிலையில், 6 கிலோமிட்டர் தூரம் அந்தக் கார் வேகமாக சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நிகழும் முன்பு சுங்க சாவடி ஊழியர் காரை நிறுத்த முற்பட்ட போது காரின் ஒட்டுநர், “என்னுடைய காரை நிறுத்த போகிறாயா? காவல்துறையினர் கூட என்னுடைய காரை நிறுத்தமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.