எப்-16 விமானத்தை வீழ்த்திய முதல் விமானி அபிநந்தன் - தாக்குதல் நடத்தியது எப்படி?

எப்-16 விமானத்தை வீழ்த்திய முதல் விமானி அபிநந்தன் - தாக்குதல் நடத்தியது எப்படி?
எப்-16 விமானத்தை வீழ்த்திய முதல் விமானி அபிநந்தன் - தாக்குதல் நடத்தியது எப்படி?
Published on

எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் விமானி விங்க் கமெண்டர் அபிநந்தன் என்று ஏர் மார்ஷல் எஸ்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இந்தியாவுக்குள் கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவ முயன்றன. அதை இந்திய விமானப் படை விமாங்கள்  விரட்டி அடித்தன. அப்போது அவர்களின் எப் 16 ரக ஜெட் விமானம், விங் காமெண்டர் அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்ற அபிநந்தனின் மிக்-21 விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் விழுந்தது. அப்போது, பாதுகாப்பாக கீழே குதித்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். தற்போது, பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட விமானி அபிநந்தன் இந்தியாவில் உள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடந்தது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு முன்பாக ரேடியோ மூலம் அபிநந்தன் பேசிய செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஆர்-73 ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவதை அவர் கூறியுள்ளார். இதன்மூலம், எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் விமானி என்ற பெருமையை அபிநந்தன் பெற்றுள்ளார். தாக்குதலின் போது நடந்த சம்பவங்கள் குறித்து டைம்ஸ் நவ் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

நடந்தது என்ன?

காலை 9.52 - 10 எப்-16 ஜெட் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களில் இருந்து கிளம்பியது இந்தியாவால் கண்டறியப்பட்டது. மூன்று குழுவாக பாகிஸ்தான் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வந்தது.

9.54 - பாகிஸ்தானில் இருந்து வரும் 10 எப்-16 ஜெட் விமானங்களை இடைமறிக்க, இந்தியாவின் மிக்-21 (MiG-21), 4 எம்கி ஜெட் விமானங்கள் கிளம்பின.

9.58 - பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்களுக்கு இந்தியாவால் முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

9.59 - இந்தியா பாகிஸ்தான் இடையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின் இரண்டாவது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் விமானப்படை பதில் அளிக்கவில்லை

10.00 - பாகிஸ்தானின் 10 எப்-16 விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதுபோல் வந்தது.

10.01 - இந்திய விமானங்களின் பதில் தாக்குதல் முயற்சியில், ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள்ளாகவே பாகிஸ்தானின் 9 விமானங்கள் திரும்பி சென்றுவிட்டன. 

10.02 - பாகிஸ்தானின் ஒரே ஒரு எப்-16 விமானம் மட்டும் இந்திய எல்லைக்குள் நீண்ட தூரம் வந்தது. கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் இருக்கும். அங்கிருந்து ராணுவ தலைமை அலுவலகத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை அழிக்க முடியும்.

10.03 - விங்க் காமெண்டர் அபிநந்தன் ஓட்டிய மிக்-21 மற்றும் ஐஏஎப் சுகோய் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தடுத்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. முதலில் தற்காப்பு தாக்குதலை நடத்தினர். சுகோய்யின் தாக்குதலில் இருந்து எப்-16 விமானம் தப்பியது.

10.04 - அங்கிருந்து திரும்பிய சுகோய், ராணுவ முகாமில் உள்ள எண்ணெய் கிடங்கை பாதுகாக்க அந்த பகுதியிலேயே பாதுகாப்புக்காக வட்டமிட்டன. அப்போது, அபிநந்தன் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை இந்திய நிலப்பரப்பில் விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் விமானத்தை மடக்கிய அபிநந்தன், ஆர்-73 ஏவுகணை மூலம் அதனை தாக்க தயாரானார்.

10.08 - ஆர்-73 ஏவுகணை மூலம் பாகிஸ்தானி எப்-16 விமானத்தை தாக்கி அழித்தார். ஆனால், இந்த தாக்குதலை முடிப்பதற்குள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டார். இதுமிகவும் அபாயகரமானதாகும். அங்கிருந்து திரும்பி இந்தியாவிற்குள் வருவது மிகவும் சிரமம். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com