மகாராஷ்டிராவில் மாதவிடாய் சுழற்சி காலங்களில் பணிக்கு செல்ல முடியாமல் இருப்பதை தவிர்க்க 30,000 பெண்கள் கருப்பையை நீக்கியுள்ளதாக காங்கிரஸை சேர்ந்த மகாராஷ்டிரா அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், நிர்வாகியுமான நிதின் ராவத், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மகாராஷ்டிராவின் கரும்புத் தோட்டங்களில் புரியும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவர்கள் மாதவிடாய் கால நாட்களில் தங்கள் சம்பளத்தை இழக்க நேரிடுவதாகவும் கூறியுள்ளார். எனவே சம்பள இழப்பதை தவிர்ப்பதற்காக சுமார் 30,000 பெண்கள் தங்கள் கருப்பையை நீக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான ஆபத்தான நிலையை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.