தங்களது நிறுவன ஊழியர்களுக்கு புதிய ஃபிட்னஸ் சேலஞ்சை அறிமுகம் செய்துள்ளது ஜீரோதா.
ஆன்லைன் தரகு நிறுவனமான ஜீரோதா, தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஃபிட்னஸ் சேலஞ்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது . அதன்படி, ஊழியர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைக்க வேண்டும். அடுத்த ஆண்டு 90% நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் அனைவருக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும். மேலும், அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் குலுக்கல் முறையில் அளிக்கப்படும் என ஜீரோதா தலைமை செயல் அலுலவர் நிதின் கமத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதின் கமத் கூறுகையில், "உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையில் தினசரி உடற்பயிற்சி இலக்கை உருவாக்குவது ஜீரோதாவில் எங்களின் சமீபத்திய ஃபிட்னஸ் சேலஞ்சில் ஒரு பகுதி. அதிக நேரம் உட்கார்ந்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் தொற்றுநோயாக மாறியுள்ளது. ஊழியர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க நாங்கள் இயன்றவரை உதவுகிறோம். அவர்களும் அவர்களது குடும்பங்களும் தினமும் நடை பயிற்சி செய்கிறார்கள் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தினமும் 1.30 மணிநேரம் செல்ஃபோனுக்கு பிரியா விடை கொடுக்கும் இந்திய கிராமம்: எங்கு தெரியுமா?