உண்மையான ஐயன் மேன்?டைட்டானியம் இதயத்தின் உதவியால் உயிர்வாழும் உலகின் முதல் நபர்!

அமெரிக்காவில் 58 வயதான நபர் ஒருவர் டைட்டானியம் இதயத்தின் உதவியால் உயிருடன் வாழ்ந்து வரும் சம்பவம் கேட்பவர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைட்டானி இதயம்
டைட்டானி இதயம்முகநூல்
Published on

அமெரிக்காவி 58 வயதான நபர் ஒருவர் டைட்டானியம் இதயத்தின் உதவியால் உயிருடன் வாழ்ந்து வரும் சம்பவம் கேட்பவர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

58 வயதான அமெரிக்கர் ஒருவருக்கு உலகிலேயே டைட்டானியத்தால் செய்யப்பட்ட இதயத்தை பொறுத்தி அசத்தியுள்ளனர் மருத்துவர்கள். மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான bivacor என்ற நிறுவனம், உருவாக்கிய titanium blood-pumper கருவியானது...செயலிழக்கும் நிலையில் உள்ள மனித இதயத்தின் செயல்பாட்டை மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  titanium blood-pumper
titanium blood-pumper

இந்த செயற்கை இதயம், முழுவதும் டைட்டானியத்தால் ஆனது. இதயம் செயலிழக்கும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு வோரொரு இதயம் பொருத்தும் வரை இது ஒரு மாற்று இதயமாக செயல்படுகிறது.

இது உண்மையான இதயத்தை போல துடிப்பது இல்லை. இதற்கு மாறாக, இதிலுள்ள magnetically levitating rotor நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்து தள்ளுகிறது.

இந்த கருவியானது, டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள பேய்லர் செயின்ட் லூக்கின் மருத்துவ மனையில் ஒரு வருடத்திற்குள் மேலாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில்தான், 58 வயதான இருதயம் செயலிழப்பு தருவாயில் இருந்த ஒரு நபருக்கு, இந்த கருவியானது பொருத்தப்பட்டுள்ளது. மாற்று இதய அறுவை சிகிச்சை மூலம் மாற்று இதயம் பொருத்தும் வரை 8 நாட்களாக இந்த டைட்டானிய இதயம் சிறந்த முறையில் அவரின் உடலில் வேலை செய்துள்ளது.

டைட்டானி இதயம்
தாய்ப்பால் வாரம்| தாய்ப்பால் குறித்து மருத்துவர் தரும் A - Z தகவல்கள்

BIVACOR இன் நிறுவனர் டேனியல் டிம்ஸ் இது குறித்து தெரிவிக்கையில், "எங்கள் TAH இன் வெற்றிகரமான முதல் மனித உள்வைப்பைக் கண்டதில் நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன். எங்கள் முதல் நோயாளி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தைரியம், எங்கள் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிபுணர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இது செயற்கை இதயங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது என இந்நிறுவனம் தெரிவிக்கிறது . மேலும், அதன் கச்சிதமான அளவு பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட, அனைத்து தரப்பினருக்கு ஏற்றதாக அமையும் என்று கூறுகிறது.

ஆண்டுதோறும் 6000 இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இது மாற்று அறுவை சிகிச்சை செய்ய காத்திருப்பவர்களின் வாழ்நாளை நீட்டிப்பதில் இந்த கருவி பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com