அமெரிக்கா, எத்தியோப்பியா, பூடான், மடகாஸ்கார், பெரு, இந்தியா உட்பட 120 நாடுகளில், உலக தாய்ப்பால் ஊட்டல் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில் குரோஷியா (Croatia) தாய்ப்பால் ஊட்டலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டின்படி 55% சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பால் ஊட்டப்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின்படி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகச்சிறந்த உணவு. இதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தர முடியும். மேலும், இரண்டு வயது வரை அல்லது கட்டாய ஆறு மாதங்களுக்குப்பிறகும் தேவைக்கேற்ப தாய்ப்பால் வழங்குவதை தொடர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவர்களை பருவ கால நோய்களிருந்து பாதுகாக்க உதவும் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது. இதனால் உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் மிகவும் குறைவு.
மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் வருங்காலத்தில் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மட்டுமன்றி தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய் மற்றும் சேய் இடையே ஆரோக்கியமான உறவு வளரும். தாய்க்கு புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இது சேய்க்கு மட்டும் அல்ல, தாய்க்கும் பல வித நன்மைகளை வழங்குகிறது. மேலும், ஒரு நாளைக்கு ஒரு சிசுவுக்கு 478 -1,356 மில்லி தாய்ப்பால் அளிப்பது உகந்தது.
இன்றைய சூழலை பொறுத்தவரை குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. ஆகவே, குழந்தைகளுக்கு ஆரோக்கிய வாழ்வை வழங்கவும், அவர்களின் வாழ்நாள் அரோக்கியத்திற்கு மருந்தாகவும் கருதப்படும் தாய்ப்பால் அளிப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைப் பெற்ற தாய்மார்கள் உணர்ந்து செயல்பட தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரம் (1 முதல் 7ம் தேதி வரை) கடை22பிடிக்கப்படுகிறது.