யாராவது ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தாலே கொட்டாவி வருவதும், கொட்டாவி விட்டபிறகு ஏற்படும் திருப்தியும் என கொட்டாவிக்கென ஸ்பெஷலான விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிதான், அமெரிக்காவில் தீவிர கொட்டாவிவிட்ட பெண் ஒருவருக்கு நேர்ந்த சோகம் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் ஜென்னா சினாட்ரா. வயது 21. இவர் ஒருநாள் தீவிரமாக கொட்டாவிவிட்டபோது, அவரின் வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்தநிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண், தனது வாயை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியாமல் மிகவும் சிரமம்பட்டு பல முயற்சிகளை செய்துள்ளார். ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இதனையடுத்து, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் ஒரு நிபுணரை ஜென்னா நாடியுள்ளார். அவரின் உதவி கொண்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வாய் தாடையை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளார் ஜென்னா.
இந்நிலையில், இது குறித்த வேதனை பதிவு ஒன்றினை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த அவர், எதிர்பாரதவிதமாக நிகழ்ந்த இச்செயலால் கடும் வேதனையை சந்தித்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில்,கொட்டாவியின் தீவிரம் இந்த அளவிற்கு இட்டு செல்லுமா என்று மக்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.