நினைவுகள், சிந்தனை, நடத்தை, கற்றல் திறன், மொழி மற்றும் அன்றாட செயல்பாடுகளைச் செய்யும் திறன்களை பாதிக்கும் ஒரு நோய்தான் டிமென்ஷியா(Dementia). இது பெரும்பாலும் வயதானவர்களையே பாதித்தாலும், வயதுடன் தொடர்புடையது அல்ல. உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோறும் 10 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர். டிமென்ஷியா பெரும்பாலும் 60 -70% பேரிடம் அல்சைமர் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. காரணம் அல்சைமர் அல்லது பக்கவாதம் போன்ற மூளையை பாதிக்கும் பலவிதமான நோய்களால் மற்றும் தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் டிமென்ஷியா ஏற்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு பெரும்பாலும் இயலாமை மற்றும் பிறரை சார்ந்துகொள்ளக்கூடிய நிலை ஏற்படுகிறது. டினெம்ஷியா உடல்நிலை, மனநிலை, சமூக நிலை மற்றும் பொருளாதார நிலைகளை பாதிக்கும். இது பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல் அவர்களை பார்த்துக்கொள்ளக்கூடியவர்கள், குடும்பம் மற்றும் சமூகம் என பெரிதளவில் தாக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
டிமென்ஷியா ஒவ்வொரு நபரிடமும் வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டுகிறது. மேலும் பாதிப்பின் அளவும் நபருக்கு நபர் மாறுபடுகிறது. சிலர் ஒரே நிலையில் நீண்ட நாட்கள் இருப்பார்கள். சிலருக்கு ஒரே நேரத்தில் பலவிதமான அறிகுறிகள் தென்படும். 7 நிலைகளில் டிமென்ஷியாவை நன்கு புரிந்துகொள்ளலாம்.
1. குறைபாடு இல்லை
எல்லோருக்குமே இந்த முதல் நிலையில்தான் தொடங்குகிறது. அறிவாற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் எதுவும் இருக்காது. மனதின் செயல்பாடு இயல்பாகவே இருக்கும்.
2. மிகமிகக் குறைவான அளவில் அறிவாற்றல் குறையத் தொடங்குதல்
பெரும்பாலான மூத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையான தேதிகளை மறப்பது, பொருட்கள் வைத்த இடத்தை மறப்பது போன்றவை.
இதுதவிர, அல்சைமர் நோயின் ஆரம்ப அறிகுறிகளில் சிலவற்றை உள்ளடக்கிய பொதுவான வயது தொடர்பான நினைவக சிக்கல்களுக்கு இடையில் இந்த நிலை மாறுபடும். இந்த நிலையின் சில பக்க விளைவுகள்:
3. குறைவான அளவில் அறிவாற்றல் குறையத் தொடங்குதல்
இந்த மூன்றாவது நிலையில் டிமென்ஷியா அல்லது அல்சைமர் அறிகுறிகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கண்கூடாகப் பார்க்கமுடியும். இந்த நிலை அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அறிகுறிகள் நீங்கள் கவனிக்கும்படியாக இருக்கும்.
4. மிதமாக அறிவாற்றல் குறையத் தொடங்குதல்
இந்த நிலை பொதுவாக அல்சைமர் அல்லது முதுமை மறதி என்று அழைக்கப்படுகிறது. அறிவாற்றல் குறைந்துவருதலின் அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரியும். இந்த நிலையில் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும்.
5. மிதமான கடுமையானஅறிவாற்றல் குறையத் தொடங்குதல்
இந்த நிலையில் ஆடை உடுத்துதல் அல்லது குளிப்பது போன்ற வழக்கமான பணிகளுக்குக்கூட உதவி தேவைப்படும். இவர்கள் வீட்டிலேயே பராமரிப்பாளர் அல்லது நினைவக பராமரிப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதுதவிர,
6. கடுமையாக அறிவாற்றல் குறையத் தொடங்குதல்
இதை நடுத்தர டிமென்ஷியா அல்லது மிதமான கடுமையான அல்சைமர் நோய் என்றும் சொல்லலாம். இந்த கட்டத்தில் குளியலறையைப் பயன்படுத்துதல் அல்லது சாப்பிடுவது போன்ற தினச்செயல்பாடுகளுக்கு உதவி தேவைப்படும். உங்கள் மேலும் தூங்குவதில் சிரமம், சித்தப்பிரமை அதிகரிப்பு அல்லது பிரமைகள், பதட்டம் மற்றும் நன்கு தெரிந்தவர்களையும் அடையாளம் காணுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் வரும்.
7. மிகக் கடுமையாக அறிவாற்றல் குறையத் தொடங்குதல்
இந்த நிலை கடுமையான அல்சைமர் நோய் அல்லது கடைசிகட்ட டிமென்ஷியா என்று அழைக்கப்படுகிறது. இதில் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ள இயலாமல் போதல், தகவல் தொடர்பு முற்றிலுமாக இல்லாமல்போதல், பேசும் அல்லது நடக்கக்கூடிய திறனை இழக்க நேரிடும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பநிலையிலேயே அன்புடன் நடத்தவேண்டும். மேலும் அவர்களிடம் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். இது நோய் மோசமடையாமல் தடுக்கும். அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுப்பது அவசியம். அறிகுறிகள் அதிகமாகும் நேரத்தில் மருத்துவ உதவியை நாடவும். அவர்களின் செயல்பாடுகளால் எரிச்சல், கோபம் வந்தாலும் அதை அவர்களிடம் காட்டாமல் இருப்பது மேலும் மனம் சோர்ந்துபோகாமல் இருக்க உதவும்.