நகத்தில் ஏற்படும் பாதிப்புகள்... காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்..!

நகத்தில் ஏற்படும் பாதிப்புகள்... காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்..!
நகத்தில் ஏற்படும் பாதிப்புகள்... காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்..!
Published on

கை மற்றும் கால் விரல் நகங்களில் பொதுவாக ஏற்படக்கூடிய பாதிப்புதான் நக பூஞ்சைத் தொற்று. நகத்தின் நிறம் மாறுதல், நக தடிமன் மற்றும் நகத்தின் விளிம்பு உடைதல் போன்றவை பூஞ்சைத் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள். 100இல் குறைந்தது 10 பேருக்கு கண்டிப்பாக இந்தப் பிரச்னை இருக்கும். கைவிரல்களைவிட கால் விரல்களில்தான் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படும். வயதானவர்களுக்கு பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கை மற்றும் கால் விரல்களை சுத்தமாக வைக்காவிட்டால்  'ஓனிகோமைகோசிஸ்' என்ற பூஞ்சைத் தொற்று டெர்மட்டோபைட் என்ற பூஞ்சானால் விரல்களில் ஏற்படும். இது ஒரேநாளில் பாதிப்பை ஏற்படுத்தாது. மெதுவாக வளரக்கூடியது.

இந்தத் தொற்று எப்படி வளர்கிறது?

வெப்பமாக, ஈரப்பதமாக இருக்கும் இருக்கும் இடங்களில் பொதுவாக பூஞ்சை செழித்து வளரும். இது வெளியே மட்டுமல்ல, நம் உடலிலும்தான். அதனால்தான் ஷூ பயன்படுத்துபவர்களுக்கு காலில் ஈரம் அதிகரித்து இந்தத் தொற்று எளிதில் ஏற்படுகிறது. நகத்தில் மாற்றம் தெரியும்போதே கவனிக்காவிட்டால், அதுவே அரிப்பு, படை மற்றும் சொறி போன்ற தீவிரமான, விரைவில் குணமாக்கமுடியாத பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

நமது உடலிலேயே நன்மை மற்றும் தீமை பயக்கக்கூடிய வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் இருக்கும். வெளிப்புற எதிர் காரணிகளுடன் இந்த பூஞ்சைக்கு தொடர்பு ஏற்படும்போது அவை வளரத்தொடங்குகிறது.

யாருக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும்?

நகத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு மற்றும் நகத்தில் அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு, நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு, உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, ரத்த ஓட்டம் சீராக இல்லாதவர்களுக்கு மற்றும் அதிகமாக ஷூ பயன்படுத்துபவர்களுக்கு, வயதானவர்களுக்கு நகப் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.

எப்படி பாதுகாப்பாக இருப்பது?

  • நகங்களை வெட்டி, சுத்தமாக, எப்போதும் உலர்வாக வைத்திருக்கவேண்டும்.
  • பொது இடங்களில் செருப்பு அணியாமல் நடப்பதை தவிர்க்கவும்.
  • கைகள் மற்றும் கால்களை கழுவினால் உடனே சுத்தமான துணியால் துடைத்துவிட வேண்டும்.
  • அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் செயற்கை நகங்களை ஒட்டுவதைத் தவிர்க்கவும்.
  • நம்பகமான, தரமான சலூன்களுக்குச் சென்று பெடிக்யூர், மானிக்யூர் செய்வதன்மூலம் நகக்கணுக்களுக்கு உள்ளே படிந்திருக்கும் அழுக்குகளும் சுத்தமாக்கப்படும். 

சிகிச்சை

பூஞ்சைத் தொற்று சீக்கிரத்தில் குணமாகாது. அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை எடுப்பது அவசியம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மற்றும் உணவு முறைகளை சரியாக கடைபிடித்தால் மட்டுமே குணமடைய முடியும். தொற்று தீவிரமானால் நகத்தை அகற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பொதுவாக இந்த தொற்று குணமாக சிகிச்சை ஆரம்பித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com