தாமிரப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை?

தாமிரப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை?
தாமிரப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை?
Published on

முன்பெல்லாம் கிராமங்களில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த தாமிர பாத்திரங்களை தற்போது நகர மக்களும் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். தாமிரத்தாலான தண்ணீர் பாட்டில்களை இப்போது எங்கும் காணமுடிகிறது. அவற்றை பார்க்கும்போது ஏன் கண்ணாடி மற்றும் சில்வர் பாட்டிகளை தவிர்த்து, தாமிர பாட்டில்கள்மீது ஆர்வம் காட்டுகின்றனர் என்று தோன்றுகிறதல்லவா? தாமிர பாட்டில்கள் புதிதாக வாங்கும்போது பளபளப்பாக இருந்தாலும், நாளடைவில் அவை ஒளி மங்கிவிடும். இருப்பினும் அதில் வைத்து நீரை குடிக்கும்போது கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

தாமிரத்தாலான பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி வைப்பது மற்றும் அவற்றில் குடிப்பது என்பது புதிதல்ல. காலை எழுந்தவுடன் தாமிர பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தாமிர பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. தாமிரத்தில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை இருக்கிறது. இதனால்தான் பெரும்பாலான நீர் சுத்திகரிப்பான்களில் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தண்ணீரிலுள்ள பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் நச்சுக்களை அழிக்கும் தன்மை தாமிரத்திற்கு உண்டு.

2. தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்ய தாமிரம் உதவுகிறது. தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலைசெய்ய ஒவ்வொருவருடைய உடலிலும் போதுமான தாமிரம் இருப்பது அவசியம். இது குறையும்போது தைராய்டு குறைபாடு உடலில் ஏற்படுகிறது. தினசரி தாமிர பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு போதுமான தாமிரத்தை வழங்குகிறது.

3. தாமிரத்திற்கு அழற்சி எதிர்ப்புத்தன்மை இருக்கிறது. உடலில் ஏதேனும் அழற்சி இருந்தால் அதை குறைக்கவும், மேலும் அழற்சி வராமல் தடுக்கவும் தாமிரம் உதவுகிறது.

4. மேலும் இந்த உலோகத்தில் ஆக்சிஸனேற்ற பண்புகளும் உள்ளன. இது சரும செல்களை பாதுகாத்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயதான தோற்றம் வராமல் தடுக்கிறது.

5. தாமிரம் உடலில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இது ரத்த குழாய்களை விரிவடையச் செய்து, இதய செயல்பாட்டை மேம்படுத்தி, நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com