சந்தோஷமான, ஆரோக்கியமான, நீடித்து நிலைக்கக் கூடிய உறவுக்கு கம்யூனிகேஷனைதான் முழுமுதற் திறவுகோலாக இருக்கும் என எவரை கேட்டாலும் சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி ஒரு காதல் உறவோ அல்லது தம்பதியிடையேயான உறவு நிலைப்பதற்கு முக்கிய காரணியாக இருக்க வேண்டியது Intimacy என சொல்லக் கூடிய நெருக்கம்தான்.
இதுதான் ஒரு காதல் உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. எப்போது அந்த நெருக்கத்தில் விரிசல் ஏற்படுகிறதோ அப்போது அந்த காதல் உறவில் இருந்தவர்கள் தனிமையில் இருக்கச் செய்கிறது. அந்த உறவே சீர்குலையு நிலைக்கு ஆளாகிறது.
இந்த Intimacy உடல், உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் அனுபவம் ஆகிய நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பயோடெக்னாலஜியின் தகவல் தேசிய மைய அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். அவை எவற்றை குறிக்கின்றன என்பதை பார்க்கலாம்.
உடல் ரீதியான நெருக்கம்:
இந்த Physical Intimacy தம்பதி அல்லது காதலர்கள் இடையே உள்ள நெருக்கத்தை குறிக்கிறது. அதாவது கைகளைப் பிடித்துக் கொள்ளுதல், தொடுதல், முத்தமிடுதல், கட்டியணைத்தல் செல்லமாக கொஞ்சுதல் மற்றும் பாலியல் ரீதியிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
உணர்ச்சி ரீதியான நெருக்கம்:
இணையர் மீதான குறிப்பிடத்தகுந்த நம்பிக்கை துளிர்க்கும் போது இந்த வகை Emotional intimacy பொதுவாகவே உருவாகிறது.
அறிவு ரீதியான நெருக்கம்:
இதனை Cognitive அல்லது Intellectual Intimacy என அழைக்கப்படுகிறது. அதாவது, காதலர்கள் அல்லது தம்பதி இடையேயான எண்ணங்கள் மற்றும் யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளும்போதும், ஒருமித்த கருத்துகளையோ வேறுபாடான கருத்துகளை பகிரும் போது ஏற்படக் கூடியது.
அனுபவ ரீதியான நெருக்கம்:
புதுமையான செயல்களில் இருவரும் தங்களை இணைத்துக் கொள்ளும் போது Experiential intimacy உண்டாகிறது. இருவரும் சேர்ந்து அந்த செயல்களில் ஈடுபடும் போது ஒரு பிணைப்பை உருவாக்குவதோடு அந்த உறவின் நெருக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.
ஒருவேளை இந்த Intimacy காரணிகள் எதுவும் எடுபடாவிட்டால் பின்வருவனவற்றை பின்பற்றலாம்.
புதுமையான வழக்கத்தை ஏற்படுத்தலாம்:
தினசரி வழக்கத்திலிருந்து வெளியேறி, புதியதாக ஒன்றை முயற்சிப்பதால் உங்களையே நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்வதோடு உறவையும் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள உதவும். அதாவது இருவரும் சேர்ந்து ஏதாவது கற்றுக்கொள்வதாகவோ, ஏதேனும் ஒரு ஆக்ட்டிவிட்டியில் ஈடுபடுத்திக் கொள்வதாகவோ இருக்கலாம். இந்த மாதிரி செயல்களால் உருவாக்கப்படும் உற்சாகம் தூண்டுதலை உருவாக்கி உறவையும் பிணைக்க உதவும்.
அடிக்கடி கட்டியணைத்தல்:
கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது போன்ற உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது உங்கள் துணையுடன் தொடர்ந்து இணைந்திருக்க உதவும். அன்புடன் தொடுவதால் ரத்த அழுத்தம் குறைவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுப்பதால் கைகளைப் பிடித்துக் கொள்ளுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
டேட்டிங் செல்லலாம்:
இருவரும் ஒருவருக்கொருவர் கவனத்தை ஈர்க்கும் வெவ்வேறு சூழலில் துணையுடன் இருக்கும்படி நேரத்தை ஒதுக்குங்கள். இதற்காக இருவர் மட்டுமே இருக்கும்படி டேட்டிங் செல்லுங்கள். இது உங்கள் வீட்டிலிருந்தும் வேலையிலிருந்தும் கவனச் சிதறலும் இல்லாமல் இருக்க உல்லாசமாக ஊர்சுற்றலாம். இதனால் மன அழுத்தமும் இல்லாமல் இருக்கும்.
ஆதரவாக இருங்கள்:
காதலர்களோ, தம்பதியோ இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக பக்கத்துணையாக இருங்கள். இணையரின் கவலைகளை, குறைகளை காது கொடுத்து கேட்பவராக இருங்கள்.