“இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இலவசம்” - தமிழக அரசு

‘குழந்தைகளுக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசியை இனி தாய்மார்கள் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெறலாம்’ என்ற வகையிலான புதிய திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
child
childpt
Published on

செய்தியாளர் - பால வெற்றிவேல்

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், “பிறந்த குழந்தைக்கு முதல் மாதத்தில் இருந்து 18 வயது வரை 16 தவணைகளாக தமிழக அரசால் இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை, இனி தாய்மார்கள் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக பெறலாம். அப்படியொரு புதிய திட்டத்தை விரைவில் தமிழக அரசு அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

child
ரத்தப்புற்றுநோய் வந்தால் உடலில் என்ன நடக்கும்? சிகிச்சை என்ன? விளக்கும் மருத்துவர்!

தனியார் மருத்துவமனைகளில் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் சில தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளின் விலையை கூடுதலாக வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

free pik

இதையடுத்து, “குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்தான அரசாணை விரைவில் வெளியிடப்படும். விரைவில் இந்த திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கி வைக்கப்பட உள்ளது” என பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com