டெங்கு தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் வருகிறது மத்தியக்குழு.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்தியக்குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீருக்கும் மத்தியக்குழு விரைந்துள்ளது.
பிற மாநிலங்களைவிடவும் டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் டெங்கு புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது. தினமும் 25 பேர்களாவது டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு