நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது நாம் அனைவரும் விரும்பும் ஒன்று. ஒவ்வொரு உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பது என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கும்.
இந்தவகையில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இதயநோய் வராமல் தடுக்கவேண்டும். இந்த கட்டுரை இதயம் சார்ந்த 7 நோய் அறிகுறிகள் இருந்தால் இருதயநோய் மருத்துவரை சந்திப்பது நல்லது என்பதை உணர்த்துகிறது
1) இருதய பரிசோதனை செய்து கொள்ளவது நலம்:
இருதய நோய் இருக்கின்றதா இல்லையா என்பதனை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் பலருக்கு பரிசோதனை செய்வதில் இருக்கும் அச்சம் என்பது அதிகம். பரிசோதனை செய்தால் ஏதேனும் புதிய பிரச்னையை மருத்துவர் கூறிவிடுவாரோ என்ற பயத்தின் காரணமாக அதை நாம் மறுக்கிறோம். ஆனால் வருடத்திற்கு 2 முறையாவது இருதய பரிசோதனை செய்து கொள்வது என்பது சிறந்தது.
2) வம்சாவழியாக இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் இருதய நோய் சார்ந்த அறிகுறிகள், பிரச்னைகள் இருந்தால் நாம் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. ஆரம்ப காலத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பேராபத்துக்களை தவிர்க்கலாம்.
3) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று. ஏனென்றால் அதிக அளவு இரத்த சர்க்கரையின் அளவு என்பது இதய இரத்த நாளங்களை பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய ஒன்று. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் கட்டாயமாக இருதயத்தை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது என்பது அவசியம்.
4) மருத்துவரின் ஆலோசனையை புறக்கணிக்கக் கூடாது:
உங்கள் குடும்ப நல மருத்துவர் உங்களின் உடல்நிலையை பரிசோதித்து ”இருதயம் சார்ந்த நோய் இருக்கிறது எனவே இருதய நோய் நிபுணரை சந்திப்பது அவசியம்” என்று கூறினால் அதனை புறக்கணிக்காமல் உடனடியாக சென்று இருதயத்தை பரிசோதிப்பது என்பது இருதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
5) மூச்சுத் திணறல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால்...
மூச்சுத் திணறல்தானே என்று அசாதாரணமாக விட்டு விடாமல் அதன் பாதிப்பின் தன்மையை அறிந்து பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் மூச்சுத் திணறல் சார்ந்த பிரச்னைக்கு சரியான மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று அதற்கான தீர்வு காண்பது என்பது முக்கியமானது.
6) அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால் :
அடிக்கடி ஏற்படும் நெஞ்சுவலியை சாதாரணமாக எண்ணிவிடாமல் அதற்கு உடனடியக கவனம் செலுத்துவது அவசியம். ”சாதாரண வலி தான்” என்று விட்டு விடாமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
7) அதிகளவு கொலஸ்ட்ரால்:
அதிகளவு கொலஸ்ட்ரால் உள்ள நபராக இருந்தால் கட்டாயம் இருதய பரிசோதனை என்பது தேவை. வரம்புக்கு மேல் உள்ள கொலஸ்ட்ரால் இருதயத்தை சீரழிக்க வழிவகுக்கும். எனவே இருதய பரிசோதனை செய்து கொண்டு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கான தீர்வையும் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவரா?
நீங்கள் அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து தொடர்ச்சியாக வேலை செய்யும்பொழுது ரத்த ஓட்டம் என்பது சற்று சீராக அமைவது இல்லை. ஓடியாடி வேலை செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் என்பது அதிகரித்து காணப்படும். எனவே இருதய பரிசோதனை செய்து இருதயத்தின் ஆரோக்கியத்தை அறிந்து கொண்டு சரியான உடற்பயிற்சி செய்து அவசியம்.
குறிப்பு: ”வரும்முன் காப்பதே சிறந்தது ”என்பதற்கு இணங்க உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் எந்த நோயினையும் வராமல் காத்துக் கொள்ளலாம். நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று அதனை சரி செய்வதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் நலமான வாழ்வை வாழலாம்.