தாங்கமுடியாத தலைவலியால் துடித்துக்கொண்டிருக்கும்போது யாரும் நாள்முழுவதும் மூக்கை துடைத்துக்கொண்டே இருக்க விரும்பமாட்டார்கள். இதுபோன்ற அசௌகர்யத்தைவிட காய்ச்சல் மேலும் எரிச்சலூட்டும். காய்ச்சலிலிருந்து விரைவில் குணமடையவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில வந்ததிகளை தள்ளிவைக்கவேண்டும்.
1. தடுப்பூசி போதுமானது
தடுப்பூசி செலுத்துவது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும், காய்ச்சல் வராமல் இருக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தனிமனித சுகாதாரம், தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல், ஆரோக்கியமான, சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அவசியம்.
2. அறிகுறிகளுடன் தான் காய்ச்சல் வரும்
இன்ஃப்ளூயன்சா வைரஸ் அறிகுறிகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தொற்று உறுதிசெய்யப்பட்டால் அவர்களிடமிருந்து சற்று விலகியிருப்பதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
3. காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சூப்
தொண்டை வலி, இருமல் மற்றும் உடல் வெப்பம் அதிகரித்தல் போன்றவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். சூப்கள் மற்றும் சூடான பானங்கள் போன்றவை அறிகுறிகளை தணிக்குமே தவிர காய்ச்சலை குணப்படுத்தாது.
4. மோசமான சளிதான் காய்ச்சல்
காய்ச்சலுக்கும் தீவிர சளிப்பிரச்னைக்கும் அறிகுறிகள் பெரும்பாலும் ஒன்றாக இருந்தாலும், சளிப்பிரச்னை காய்ச்சலின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. காய்ச்சல் சற்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
5. காய்ச்சலுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்துதல் போதுமானது
வைரஸின் திரிபுகள் தடுப்பூசியை பயனற்றதாக்கிவிடும். எனவே இதுபோன்ற காய்ச்சல் வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வருடந்தோறும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம்.