ஒல்லியாக இருப்பவர்கள் சோம்பேறியா? - அசரவைத்த ஆய்வு முடிவுகள்

ஒல்லியாக இருப்பவர்கள் சோம்பேறியா? - அசரவைத்த ஆய்வு முடிவுகள்
ஒல்லியாக இருப்பவர்கள் சோம்பேறியா? - அசரவைத்த ஆய்வு முடிவுகள்
Published on

உடற்பருமனால் அவதிப்படுபவர்களுக்கும், உடல் எடையை குறைக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒல்லியாக இருப்பவர்களை பார்த்தால் அவர்கள் ஏதோ வரம்பெற்றவர்கள்போல் தோன்றும். ஒல்லியாக இருப்பதுதான் ஃபிட் என்றும், அவர்கள்தான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் நினைப்பது சில நேரங்களில் தவறு என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். ஒல்லியாக இருப்பவர்களுக்கும் ஹைபோதைராய்டிசம், உள்ளுறுப்பு சதை, பிசிஓஎஸ் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் மற்ற இளம்வயதினருடன் ஒப்பிடுகையில் ஒல்லியாக இருக்கும் இளைஞர்கள்தான் சோம்பேறிகளாக இருப்பதாகக் கூறுகிறது ஒரு சமீபத்திய ஆய்வு. ஆனால் இதில் ஒரே வித்தியாசம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மாறுபடுவர் என்கிறது அந்த ஆய்வு.

இருப்பினும் ஒல்லியாக இருப்பவர்களில் 25 பேரில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்க முயற்சித்து வருவதாகவும் கூறுகிறது அந்த ஆய்வு. தொடர்ந்து உடலை இயக்கத்தில் வைத்திருப்பவர்களுக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுடைய உடல் அந்த கலோரிகளை எரித்து எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்று நிபுணர்கள் நினைத்தனர். எனினும், அபெர்டீன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ஒல்லியாக இருப்பவர்களில் கால்வாசிக்கும் குறைவானவர்களே உடலை இயக்கத்தில் வைத்திருப்பவர்களாகவும், மற்றவர்களுக்கு அவர்களுடைய உணவு முறை மற்றும் பசியின்மை போன்றவை எடையை கட்டுப்படுத்துகிறது என்றும் கண்டறிந்துள்ளது.

சோம்பேறியாக இருந்தாலும், மெலிந்த தேகமுடையவர்கள் ஆரோக்கியமான இதயத்தையேக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் உடலின் அளவு அதற்கு துணைபுரிகிறது. அதேசமயம் செல் மெட்டபாலிசம் நடத்திய ஒரு ஆய்வில், ஒல்லியாக இருப்பவர்களுக்கு அதிக அளவு தைராய்டு ஹார்மோன் உள்ளது எனவும், இது ஓய்வு நேரத்தில் கலோரிகளை எரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

அமர்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறையை மாற்றுவது எப்படி?

எடையை குறைக்க டயட் முறை மற்றும் ஜிம் என அவதிப்பட தேவையில்லாத மெலிந்த தேகமுடைய அதிர்ஷ்டசாலிகள்கூட சோம்பலை விரட்டியடிக்க சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சோம்பலிலிருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக விரும்புபவர்கள் இந்த எளிய வழிகளை பின்பற்றலாம்.

1. லிப்ட்டுக்கு பதில் படிக்கெட்டுகளை பயன்படுத்துங்கள்
2. உணவுக்குப் பிறகு சிறிது தூரம் நடக்க வேண்டும்.
3. வேலை சம்பந்தமாக தொலைபேசியில் உரையாடும்போது முடிந்தவரை நடந்துகொண்டே பேசலாம்.
4. சிறிது தூரம் மட்டுமே செல்லவேண்டி இருந்தால் நடந்தே செல்வதை பழக்கமாக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com