பீர் குடித்தால்கூட இத்தனை நன்மைகளா? ஆனால்...!

பீர் குடித்தால்கூட இத்தனை நன்மைகளா? ஆனால்...!
பீர் குடித்தால்கூட இத்தனை நன்மைகளா? ஆனால்...!
Published on

பீர் குடிப்பது குடலுக்கு நல்லது மற்றும் இது நாள்பட்ட வியாதிகளை குணமாக்கும் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் (CINTESIS) வடக்கு போர்ச்சுகலில் உள்ள போர்டோ நகரில் அமைந்திருக்கிறது. இந்த மையம் சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் பீர் குடிப்பதால் குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாடு மேம்படுகிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற மிகவும் பொதுவான நாள்பட்ட நோய்களைத் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

23 முதல் 58 வயது வரையிலான ஆரோக்கியமான நபர்கள் இந்த ஆய்வுல் உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு தினசரி ஆல்கஹால் அல்லாத 330 மி.லி பீர் குடிக்க கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வு, உடலில் கொழுப்பு மற்றும் எடை அதிகரிக்காமல், குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை அதிகரிக்கிறது என்ற மகிழ்ச்சியான முடிவை கொடுத்திருக்கிறது.

அதேசமயம் பீர் குடிப்பது குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்ற கார்டியோமெடபாலிக் பயோமார்க்ஸர்களின் குறிப்பிடத்தக்க அளவில் தலையிடாது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே ரெட் ஒயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவைப் போன்றே பீரிலும் நன்மை பயக்கும் பாலிபினால்கள் உள்ளது என்றும் இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேளாண்மை மற்றும் உணவு வேதியியல் இதழில் வெளியான இந்த ஆய்வில் பீர் குடிப்பது நல்லது என்று கூறப்பட்டிருந்தாலும், அது ஆல்கஹால் அல்லாத பீராக இருக்கவேண்டும் என்று செக் வைத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com