தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமி ஸ்ரீஷாவுக்காக அரசு உதவியை நாடும் பெற்றோர்

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமி ஸ்ரீஷாவுக்காக அரசு உதவியை நாடும் பெற்றோர்
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமி ஸ்ரீஷாவுக்காக அரசு உதவியை நாடும் பெற்றோர்
Published on
முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தங்களின் 9 மாத குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டுமென சேலத்தைச் சேர்ந்த தம்பதி கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி, ஜெயந்தி தம்பதியினருக்கு ஸ்ரீஷா என்கிற குழந்தை உள்ளது. குழந்தைக்கு 9 மாதங்கள் ஆன நிலையில், போதிய வளர்ச்சி இல்லாத்தை அறிந்த பெற்றோர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடியுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்க்க அறிவுறுத்தியாதாக தெரிகிறது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்ததில்  குழந்தைக்கு முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் (SMA TYPE 1) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை உடனடியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தங்களால் இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாத நிலையுள்ளதாகவும், எனவே தமிழக அரசு தங்களது குழந்தையை காப்பாற்ற உதவி செய்யுமாறும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
9 மாதமே ஆன தங்களது குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து உடனடியாக கிடைக்க தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு ஆவணம் செய்யுமாறு குழந்தையின் தாய் ஜெயந்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com